திருவாரூர்: வலங்கைமான் அருகே சித்தன் வழுதுார் தென்கரைகுச்சிப்பாளையம் ஸ்ரீ சித்திவினாயகர், ஸ்ரீபாலமுருகன் மற்றும் ஸ்ரீ இடும்பன் கோவில் கும் பாபிஷேகம் நேற்று நடந்தது. திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே சித்தன் வழுதுார் தென்க ரை குச்சிப்பாளையம் மிகவும் பழமையான ஸ்ரீசித்திவினாயகர், ஸ்ரீபாலமுருகன் மற்றும் ஸ்ரீ இடும்பன் சுவாமிகள் ஒரேக் கோவிலில் அருள் பாலித்து வந்தனர். அப்பகுதியினர் வரி வசூல் செய்து புதிதாக கோவில் கட்டினர். இதற்கான கும்பாபிஷேகத்தை தொடர்ந்து கடந்த 6 ம்தேதி அனுக்கை, விக் னேஷ்வர பூஜை, வாஸ்த்து சாந்தி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்து வந்தது. 7 ம் தேதி காலை 8.30 மணிக்கு பல்வேறு பூஜைகள் துவங்கிய இரவு 8.30 மணி வரை நடந்தது. நேற்று காலை 7.30 மணிக்கு யாகபூஜை துவங்கியது. அதன் பின் பல்வேறு பூஜைகளுக்கு பின் கடம் புறப்பாடு துவங்கி காலை 10.00 மணிக்கு விமான த்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.இதில் சுற்றுப்பகுதியினர் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக் தர்க ளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழுத் தலைவர் தவமணி தலைமையில் அப்பகுதியினர் செய்திருந்தனர்.