சிதம்பரம்: தில்லைக்காளியம்மன் கோவில் வைகாசிப் பெருவிழா @நற்று (8ம் தேதி) காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. இதனையொட்டி @நற்று காலை தில்லைக் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு தில்லைக் காளியம்மன் சன்னதியில் விநாயகர் பூஜை நடைபெற்று காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதனைத் தொடர்ந்து தில்லைக்காளியம்மன் மஞ்சத்தில் புறப்பாடு செய்து பக்தர்களுக்கு அருள்பாலி க்கிறார். வைகாசிப் பெருவிழாவில் தினமும் தில்லைக் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனைகள் நடைபெற்று இரவு அம்மன் புறப்பாடு செய்து வீதி உலா நடந்தது. வரும் 12ம் தேதி தெருவடைச்சான் (அன்ன வாகனம்), 16ம் தேதி தேரோட்டம், 17ம் தேதி சிவப்பிரியைத் தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி, 19ம் தேதி தெப்பல் உற்சவம், 20ம் தேதி திரு ஊஞ்சல் உற்சவத்துடன் முடிகிறது.