பதிவு செய்த நாள்
11
மே
2015
02:05
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, அதியமான்கோட்டை தட்சிணாகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு, சிறப்பு பூஜை இன்று (மே, 11) நடக்கிறது. இதையடுத்து, காலை, 6.30 மணிக்கு கணபதி ஹோமம், பைரவர் ஹோமம், கோ பூஜை, கால பைரவருக்கு, 64 வகையான சிறப்பு வகையான ராஜ அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. இரவு, 10.30 மணிக்கு சத்ரு சம்ஹார ஹோமம், 1,008 கிலோ மிளகாய், 108 கிலோ மிளகு கொண்டு சிறப்பு ஹோமம், 1,008 லிட்டர் பால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.