நாகர்கோவில் அருகில் உள்ள அழகிய பாண்டியபுரம், அழகிய நம்பி கோயிலில் குழந்தை வடிவில் கண்ணன் அருள்புரிகிறார். இந்தக் கண்ணன் துயில் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதனால், கண்ணன் தூக்கம் கலையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தவில், நாதஸ்வரம் போன்ற வாத்தியங்கள் இசைக்கப்படுவதில்லை. புல்லாங் குழலின் மெல்லிய இசை மட்டும் பூஜையின் போது ஒலிக்கும்.