திருவாரூர் மாவட்டம், மன்னார்குடிக்கு அருகே உள்ள திருத்தலம் திருவண்டு துறை, இங்கு உள்ள சிவன்கோயிலில் பிருங்கு ரிஷி வண்டு உருவம் எடுத்து அர்த்தநாரீசுவரருடைய உருவத்தை துளைத்துச் சென்று சுவாமியை மட்டும் பிரதட்சணம் செய்தார். கர்ப்பக் கிரகத்தில் இன்றைக்கும் வண்டின் ரீங்காரம் ஒலித்துக் கொண்டே இருப்பதைக் கேட்கலாம்.