பொதுவாக நடனக்கோலத்தில் நடராஜரைத் தான் கண்டிருக்கிறோம். சரஸ்வதிதேவியின் நடனக் கோலத்தைக் காண்பதரிது. அத்தகைய சிற்ப சுவாமிமலை சிற்பக்கூடத்தில் மூன்றடுக்கு சதுர பீடம். மலர்ந்துள்ளது முழுத்தாமைர. அதன்மேல் ஒற்றைக் கால் ஊன்றி நடனமிடும் தேவி. நான்கு கரங்களில் இருகரங்கள் வீணையை மீட்டுகின்றன. இருபுறமும் எழுந்துநிற்கும் யாளிகள். படர்ந்து நிற்கும் திருவாட்சி வளைவு. அதில் அற்புதமான வேலைப்பாடுகள். இதனைப் பார்க்கும்போதே, நம் மனம் பரவசத்தில் ஆழ்கிறது.