சேலம், அம்மாபேட்டையில் அமைந்திருக்கும் அருள்மிகு காளியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் உள்ள அரசமரம் புராதனமானது. கோயிலின் ஈசான மூலையில் உள்ள இந்த மரம் 9 கிளைகள் கொண்டு வளர்ந்து நிற்பதாலும், இதனுடன் வேப்ப மரமும் இணைந்திருப்பதாலும், மரத்தடியில் புற்று வளர்ந்திருப்பதாலும் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. இந்த மரத்தை நவகிரக அரச மரம் எனப் போற்றி வணங்குகிறார்கள், பக்தர்கள்.