சிவகாசி சிவன் கோயில் வைகாசி விழா மே 19 ல் கொடியேற்றத்துடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மே 2015 11:05
சிவகாசி: சிவகாசி சிவன் கோயில் வைகாசி விழா வரும் 19 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சிவகாசியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான விஸ்வநாதசுவாமி, விசாலாட்சியம்மன் என்னும் சிவன் கோயில் உள்ளது. இங்கு வைகாசி பிரமோற்சவ விழா வரும் 19 ல் கொடியேற்றத்துடன் துவங்கி 11 நாள் நடைபெறுகிறது. விழா முதல் நாளான 18 இரவு 7 மணிக்கு அங்குரார்பணம் மூஷிக வாகனத்தில் விநாயகர் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பின் 20 இரவு 8 மணிக்கு பூதவாகனம் மற்றும் காமதேனு வாகனத்தில் சுவாமி அம்பாள் வீதி உலா வருகிறார். 22ல் ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி வலம், 24ல் கழுகேற்றம், 25ல் இரவு 8 மணிக்கு சுவாமி பிரியாவிடையுடன் தபசுக்காட்சி அளித்தல், அன்றரவு 1 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. 26 ல் திருத்தண்டியல் குதிரை வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 27 இரவு 8.45 மணிக்கு நடக்கிறது. அதன்பின் ஊஞ்சலில் சுவாமி வீதி உலா வருதல், 10ம் நாளான 28 காலை 9. 30 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், இரவு 8 மணி ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் வீதி உலா நடக்கிறது, கடைசி நாளான 29 ல் உற்சவ சாந்தி நடைபெறுகிறது.