பதிவு செய்த நாள்
16
மே
2015
11:05
கோவை : சரவணம்பட்டி சிரவையாதீனம், சென்னை சைவசித்தாந்தப் பெருமன்றம் சார்பில், 110வது சைவ சித்தாந்த மாநாடு கோவை கவுமாரமடாலயத்தில் நேற்று துவங்கியது. ஞானியர் சுவாமி, மறைமலை அடிகள் ஆகியோரால், 1905ம் ஆண்டு சைவசித்தாந்த பெருமன்றம் துவங்கப்பட்டது. இதன், 110ம் ஆண்டு விழா, சின்னவேடம்பட்டி கவுமாரமடாலயத்தில் நேற்று துவங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியில், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், கந்தசாமி சுவாமிகள், நம்மைபேணும் அம்மை, சிரவையாதீன வரலாறு உள்ளிட்ட பல்வேறு சைவ நுால்கள் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில், பேரூராதீனம் இளையபட்டம் மருதாசல அடிகள், பொம்மபுரஆதீனம் சிவஞானபாலய சுவாமி, தென்சேரிமலையாதீனம் முத்துசிவராமசாமி சுவாமி உட்பட பலர் கொண்டனர். இரண்டாம் நாளான இன்று சைவமகளிர் மாநாடும், மதியம் சைவ இளைஞர் மாநாடும் நடக்கிறது. நாளை மூன்றாவது நாளில் சைவர் மாநாடு நடக்கிறது.