திருஞானசம்பந்தர் அவதரித்து, அவருக்கு அம்பிகை ஞானப்பால் புகட்டிய தலம் சீர்காழி. இத்தலத்தில் அருளும் பிரம்மபுரீஸ்வரரை பற்றி சம்பந்தர் 694 பாடல்கள் பாடியிருக்கிறார். இத்தலத்தை குறித்து சம்பந்தர் இயற்றிய பிரமனூர் வேணுபுரம் எனத்துவங்கும் பாடலில் அத்தலத்திற்குரிய 12 பெயர்களையும் சொல்லி பதிகம் பாடியுள்ளார். அவை, பிரமனூர், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, காளிபுரம், கொச்சைவயம், கழுமலம் என்பனவாகும்.