திருப்பதியில் ஜூலை 15ல் ஆழ்வார் திருமஞ்சனம்; ஜூலை 16ல் ஆனி வார ஆஸ்தானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2025 12:07
திருப்பதி; திருமலை திருப்பதியில் ஜூலை 15ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
திருப்பதியில் ஆனிவார ஆஸ்தான பர்வததிற்கு முந்தைய செவ்வாய்கிழமை, ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோத்ஸவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய நாட்களில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். அதன்படி, ஜூலை 15ல் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.மறுநாள் ஜூலை 16ம் தேதி ஸ்ரீவாரி கோயிலில் ஆனி வார ஆஸ்தானம் நடைபெறும். இதன் காரணமாக, இந்த இரண்டு நாட்களுக்கு விஐபி பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜூலை 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் நெறிமுறை பிரமுகர்கள் தவிர, விஐபி பிரேக் தரிசனங்களுக்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.