திருமலை நாயக்கர் மகால் ரகசிய அறையில் இருப்பது என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2011 11:07
மதுரை:மதுரை திருமலை நாயக்கர் மகாலில், அவ்வப்போது திறக்கப்படும் "அந்த ரகசிய அறையில் இருப்பது என்ன என்பது குறித்து சுற்றுலா பயணிகளுக்கு இடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது.மகாலில் ஒலி,ஒளிக்காட்சியை பார்க்கும் இடத்தின் இடது புறத்தில், "மந்திரி டூம் பகுதியில், 8 அடி அகலம், 20 அடி நீளம் கொண்ட ரகசிய அறை உள்ளது.இரும்பு கம்பி கதவுகளால் அமைக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளதாலும், "சீல் வைக்கப்பட்டுள்ளதாலும், இந்த அறை ரகசியத்தை அறிய சுற்றுலா பயணிகளுக்கு இடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது.தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது :மதுரை உட்பட தென்மாவட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட விலைமதிப்புள்ள ஐம்பொன் சிலைகளை இந்த அறையில்தான் பாதுகாக்கிறோம். பாதுகாப்பு கருதி இதன் விபரங்களை முழுமையாக கூறமுடியாது. சமீபத்தில்கூட, உலக செம்மொழி மாநாட்டில் இச்சிலைகளை கண்காட்சிக்கு வைத்தோம். சென்னை மியூசியத்தில் மட்டுமே இதுபோன்ற சிலைகளை பாதுகாக்கும் வசதி உள்ளது.மகாலில் இவ்வசதிஇல்லாததால், பொதுமக்களின் பார்வைக்கு வைக்க பயமாக உள்ளது.விரைவில் சென்னை மியூசியத்தில் இச்சிலைகளைவைக்கும் திட்டம் உள்ளது, என்றனர்.