திருவாரூர்: நன்னிலம் அருகே ஆனைக்குப்பம் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவிலில் 26 ஆம் ஆண்டு வைகாசி தீமிதி திருவிழாவில் சுற்றுப்பகுதியினர் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே ஆனைக்குப்பம் ஸ்ரீ மகாமாரி யம்மன் கோவிலில் வைகாசி மாதத்தில் தீமிதி திருவிழா மிக விமர்சியாக நடந்து வருகிறது. தற்போது 26 ஆம் ஆண்டிற்கான விழாவைத் தொடர்ந்து கடந்த 14ம் தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி துவங்கியது. தினசரி சிறப்பு அலங்காரம் மற்றும் பல்வேறு அபிஷேக நிகழ்ச்சி நடந்து வந்தது. நேற்று முன் தினம் மதியம் வளப்பு ஆற்றில் இருந்து சுவாமி, கரகம் மற்றும் காவடி புறப்பாடு துவங்கி முக்கிய வீதிகள்வழியாக மாலை கோவிலை சென்ற டைந்தது. அதன் பின் சுற்றுப்பகுதியினர் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத் தினர். திருவாரூர் ஆன்மிக ஆனந்தம் அமைப்பு சார்பில் அதன் தலைவர் கன கராஜ் தலைமையிலான குழுவினர் அன்னதானம் வழங்கினர். திருவாரூர் லட் சுமிநாராயணா கூட்டுவு வங்கிதலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பங் கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளி ட்ட விழாக்குழுவினர் செய்திருந்தனர்.