கம்மாபுரம் அம்மன் கோவிலில் 23ம் தேதி திருவிளக்கு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மே 2015 11:05
கம்மாபுரம்: கம்மாபுரம் கிழக்கு காலனி, ஜானகி அம்மன் கோவிலில், வரும் 23ம் தேதி திருவிளக்கு பூஜை நடக்கிறது. இதனை முன்னிட்டு, வரும் 22ம் தேதி காலை 5:00 மணிக்கு கணபதி ஹோமம், கோமாதா பூஜை, Œக்தி கரகம் புறப்பாடு, மாலை 3:00 மணிக்கு மணிமுக்தாற்றிலிருந்து காவடி, பால்குட வீதியுலா, இரவு 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. 23ம் தேதி முக்கிய நிகழ்வாக காலை 8:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, அன்னப்படையல், மாலை 5:30 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. 24ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம், சாகை வார்த்தல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.