வேதாரண்யம்: வேதாரண்யம் வள்ளியம்மை சாலையில் உள்ள வீரமாகாளியம்மன் கோவில் ஆண்டு விழாவையொட்டி அம்மனுக்கு பாலாபிஷேகமும், கொப்பரைத் திருவிழாவும் நடந்தது. கடந்த, 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவையொட்டி, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மகாதேவபட்டினம் மதிவாணன் குழுவினரின் கோவலன் கண்ணகி புராண கதா காலேட்சேபமும் நடந்தது. கொப்பரைத் திருவிழாவை யொட்டி, வேதாமிர்த ஏரியிலிருந்து பக்தர்கள் பால்காவடி எடுத்து வந்து அம்மனுக்கு பாலபிஷேகமும், சிறப்பு தீபாரதனையும் நடந்தது. பின்னர் அம்மன் வீதியுலா காட்சி நடந்தது. அம்மனுக்கு, அக்னி கொப்பரை எடுத்து, பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.