பதிவு செய்த நாள்
19
மே
2015
11:05
புதுச்சேரி: வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை பெற்றதையடுத்து கிறிஸ்தவ ஆலயத்தில், அ.தி.மு.க.,வினர் வேண்டுதல் நிறைவேற்றினர். ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதலை பெற்றதையடுத்து, புதுச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள துாய இருதய ஆண்டவர் பசிலிக்காவில், அ.தி.மு.க.,வினர் மெழுகுவர்த்தி ஏந்தி, சிறப்பு பிரார்த்தனை செய்து, வேண்டுதலை நிறைவேற்றினர். மாநில செயலாளர் புருஷோத்தமன் எம்.எல்.ஏ., அன்பழகன் எம்.எல்.ஏ., துணைச் செயலாளர்கள் கணேசன், பன்னீர்செல்வி, பொருளாளர் சுத்துக்கேணி பாஸ்கர், நகர செயலாளர் அன்பானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.