அவலூர்பேட்டை: உண்ணாமனந்தல்-விநாயகபுரத்தில் சக்தி விநாயகர் கோவிலில் வரும் 22ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. மேல்மலையனூர் ஒன்றியம் உண்ணாமனந்தல்-விநாயகபுரம் கிராமத்தில் சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 21ம் தேதி காலை கணபதி ஹோமம், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையும், நடக்கிறது. அன்று இரவு 9 மணிக்கு முதற்கால மகா வேள்வி பூஜை ஹோமமும் யாகசாலை பிரவேசமும் , பின்னர் 12 மணிக்கு மூலவர் யந்திர பிரதிஷ்டை கண் திறப்பும் நடக்கிறது. மறுநாள் (22 ம் தேதி) காலை இரண்டாம் கால யாக சாலை பூஜையும், 9: 15 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.