பழநி:பழநி கோயில் முதல் "வின்ச் ல், இரும்பு கயிறு (ரோப்) மாற்றும் பணி நேற்று துவங்கியது. அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு, மூன்று "வின்ச் இயக்கப்படுகிறது. இவற்றிற்கான கயிறு அவ்வப்போது மாற்றப்படும். கடந்த 1982 முதல் செயல்பட்டு வரும் முதல் "வின்ச் சின், கயிற்றை மாற்றும் பணி நேற்று துவங்கியது. மற்ற இரண்டு "வின்ச் கள் இயங்கின. முதல் "வின்ச் ல், 35 மி.மீ., கனம்; 450 மீட்டர் நீள கயிறு பொருத்தப்பட்டுள்ளது. இதில் 290 மீட்டர் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். எஞ்சியவை மலைக்கோயில் கட்டுப்பாட்டு அறையில் சுற்றப்பட்டிருக்கும். நேற்று புதிய கயிறு, மற்றொரு கயிறு மூலம் இழுத்துச் செல்லப்பட்டு மலைக்கோயில் அறையில் பொருத்தப்பட்டது.மூன்று டன் எடையுள்ள இதன் மதிப்பு, ஐந்து லட்ச ரூபாய். முழு பராமரிப்புக்கு பின், நாளை முதல் "வின்ச் மீண்டும் இயங்கும்.