பதிவு செய்த நாள்
20
மே
2015
12:05
கோபி: வழக்கில் இருந்து விடுதலை பெற்ற அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டி, கோபி, கொளப்பலூர் பச்சை நாயகி அம்மன் கோவிலில், எம்.எல்.ஏ., செங்கோட்டையன் தலைமையில், 108 தேங்காய் உடைத்து வழிபாடு செய்தார். அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதலை பெற்றதற்கும், மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டியும், கொளப்பலூர் பச்சை நாயகி அம்மனுக்கு, அபிஷேக, ஆராதனை, அலங்கார வழிபாடு நடந்தது. எம்.எல்.ஏ., செங்கோட்டையன் தலைமையில், 108 தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நகராட்சி தலைவர் ரேவதிதேவி, துணைத்தலைவர் செல்வராஜ், முன்னாள் சிட்கோ வாரியத் தலைவர் சிந்து ரவிசந்திரன், மாவட்ட துணை செயலாளர் சுலோச்சனா நடராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சிறுவலூர் மாரப்பன், முன்னாள் நகராட்சி தலைவர் கந்தவேல் முருகன், வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் காளியப்பன், அளுக்குளி பஞ்., தலைவர் மயில்சாமி, வாசு, நகர துணை செயலாளர் இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்றனர்.