மத்திய பிரதேசத்தில் தீபாவளியை கோஜாகார என்ற பெயரில் திருமகள் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். கோஜாகாரா என்றால் இரவு கண்விழித்தல் என்று பொருள். அன்று மகாலட்சுமி உலகில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பார்த்து எந்த வீட்டில் தீப ஒளி அதிகமாக இருக்கிறதோ, அந்த வீட்டிற்கு செல்வதை வாரி வழங்குவதாக நம்புகின்றனர். ஆகவே அன்று இரவு கண்விழித்து தீபங்கள் ஏற்றி, பாடல் பாடி, நடனமாடி மகாலட்சுமியை வரவேற்கின்றனர்.