வேதாரண்யம்: கத்திரிப்புலம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிப்பட்டனர். வேதாரண்யம் அடுத்த கத்திரிப்புலம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கும்பாபிஷேக திருப்பணிகள் செய்யப்பட்டு அதன் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு இரு நாட்கள் யாகசாலை பூஜைகள் நடந்து காலையில் கடம் புறப்பாடு நடந்தது. கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் கும்பாபிஷக புனித நீரை ஊற்றினர். தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகமும், தீபாரதனையும் நடந்தது. இதில், பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிப்பட்டனர். விழா ஏற்பாடுகளை கத்திரிப்புலம் கிராமவாசிகளும், திருப்பணி உபயதாரர்களும் செய்திருந்தனர்.