Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வால்பாறை சுப்பிரமணிய சுவாமி ... வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் லட்சார்ச்சனை விழா; திருக்கல்யாணம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
50 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு குலசேகரன்பட்டினத்தில் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
50 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு குலசேகரன்பட்டினத்தில் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

11 டிச
2025
11:12

துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் உள்ள சிதம்பரேஸ்வரர் கோவிலில், 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளது. துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில், பழமையான சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இதன் அதிஸ்டானப் பகுதி மண்மூடி இருந்த நிலையில், அதில், கல்வெட்டு இருப்பதாக, அந்த ஊரின் சிவனடியார் இல்லங்குடி தகவல் தெரிவித்ததை அடுத்து, கல்வெட்டு ஆய்வாளர் ஆறுமுகனேரி தவசிமுத்து, அதை படியெடுத்து ஆய்வு செய்தார்.


இதுகுறித்து, தவசிமுத்து கூறியதாவது: சோழர்களின் பிடியில் இருந்து, போரின் வாயிலாக பாண்டிய நாட்டை விடுவித்தவரும், இலங்கையின் மீது போரிட்டவருமான முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில், இந்த கோவில் கட்டப்பட்டதற்கான அடையாளமாக, இந்த கல்வெட்டு உள்ளது. வணிக நகரம் அதாவது, கிழக்கு கடற்கரையில் கடல்வழி வணிகத்தை மேம்படுத்த, கொற்கைக்கு அடுத்ததாக காயல்பட்டினம், வீரபாண்டியன் பட்டினம் உள்ளிட்ட துறைமுகங்களுடன், குலசேகர பாண்டியன் பெயரால், வணிக நகராக உருவாக்கப்பட்டதே குலசேகரபட்டினம். இது, மதுரை நாயக்கர் ஆட்சி காலம் வரை வணிகத் துறைமுகமாக இருந்ததை, இவ்வூரில் உள்ள கச்சிகொண்ட பாண்டீஸ்வரர் கோவில் கல்வெட்டின் வாயிலாக அறிய முடிகிறது. அதேசமயம், முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன், உதயமார்த்தாண்டன் ஆகிய பாண்டிய, சேர மன்னர்களின் பெயரில் கட்டப்பட்ட கச்சிகொண்ட பாண்டீஸ்வரர், குலசேகரவிண்ணவர் எம்பெருமான், உதயமார்த்தாண்ட விநாயகர் ஆகிய கோவில்களில் இருந்து படியெடுக்கப்பட்டதன் வாயிலாக அறிய முடிகிறது. இவ்வூரில் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன், குலசேகர பாண்டியன், உதயமார்த்தாண்டன் ஆகிய பாண்டிய, சேர மன்னர்கள் பெயரில் கச்சிகொண்ட பாண்டீஸ்வரர், குலசேகரவிண்ணவர் எம்பெருமான், உதயமார்த்தாண்ட விநாயகர் ஆகிய கோவில்களில் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் வாயிலாக, இந்த துறைமுகங்களின் மீது, சேரர்களும், சோழர்களும் ஆதிக்கம் செலுத்தியதையும் அறிய முடிகிறது.


நிலதானம் இந்நிலையில், பிற்கால பாண்டியர்களால் கட்டப்பட்ட, மற்றொரு சிவன் கோவிலான சிதம்பரேஸ்வரர் கோவிலின் கருவறை அதிஸ்டானப் பகுதியின் ஜகதி பட்டிகையில் உள்ள கல்வெட்டைதான், சில மாதங்களுக்கு முன் நான் படியெடுத்தேன். அதில், மூன்று வரிகள் தெளிவாகவும், பின் உள்ள வரிகள் சிதைந்தும் உள்ளன. இதன்படி, இந்த கோவில், 1268 முதல், 1318 வரை ஆட்சி செய்த முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த ஊருக்கு அப்போது, ‘மானவீர வளநாட்டு குலசேகரப்பட்டினம்’ என்ற பெயர் இருந்து உள்ளது. இந்த கல்வெட்டு வாயிலாக, திருவாதிரை நாளில் பூஜைகள் நடத்த, மன்னர் நிலதானம் அளித்ததை அறிய முடிகிறது. இந்த கல்வெட்டின் எழுத்துரு, 750 ஆண்டுகள் பழமையானது. இதேபோல் இன்னொன்று ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியிலும், சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இதிலும், முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கல்வெட்டு உள்ளது. அதில் உள்ள எழுத்துருவும் இதுவும் ஒரே மாதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். – நமது நிருபர் –

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தியில் ஏழு கங்கை அம்மன் திருவிழா பாரம்பரிய முறையில் வெகு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான லட்சுமி தீர்த்த ... மேலும்
 
temple news
சென்னை; சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு நிலதானம் அளித்த ஆவணம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. சென்னையில் ... மேலும்
 
temple news
சூலூர்; செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில் தங்கதேருக்கான தங்கத் தகடுகள் பொருத்தும் பணி ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாத சஷ்டி பூஜை விழா நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar