குளித்தலை: குளித்தலை மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் மற்றும் தீ மிதித்தல் நிகழ்ச்சி நடந்தது. குளித்தலை மகா மாரியம்மன் கோவில் சித்திரை மாத திருவிழா கடந்த, 3ம் தேதி பூச்சொரிதலுடன் துவங்கியது. குளித்தலையை சுற்றியுள்ள கிராம மக்கள், நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். இதில், தேரோட்டம் நடந்தது. பொதுமக்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக தேர் நிலைக்கு வந்தது. திருத்தேர் நிலைக்கு வந்ததை தொடர்ந்து, பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்கள் அலகு குத்தியும், அக்கினி சட்டி எடுத்தும், குழந்தைகளை தொட்டியில் கட்டியும் வேண்டுதலை நிறைவேற்றினர். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சேர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.