மலைப்பாங்கான பகுதிகளுக்கு செல்பவர்கள், உயரமான பாறைகளில் நின்று கீழே உற்று நோக்குவது வழக்கம். அப்போது, மேலிருந்து கீழே விழுவது போல தலைச்சுற்று வரும். கீழே குதிக்கலாமா என்ற எண்ணத்தை, அங்கு சுற்றியிருக்கும் கெட்ட ஆவிகள் மனதிற்குள் உருவாக்கும். அவ்வாறு தவறி விழுந்துவிட்டால் எலும்பு கூட மிஞ்சாது. அவ்வளவு பயங்கரமான அனுபவம் அது.ஆனால், இந்த பயங்கரத்தையும் விட பயங்கரம் ஒன்று உள்ளது. அதுதான் பாவம் என்னும் படுகுழியில் வீழ்வதாகும். பாறையில் இருந்து பள்ளத்தில் விழுந்தால் இறப்பு வரும் வரை மட்டுமே வேதனை. பாவப்பள்ளத்தில் விழுந்தால் நித்திய வேதனை. தவறு செய்தவர்கள் பலர், மனசாட்சியின் உறுத்துதலால் உந்தப்பட்டு காலமெல்லாம் வேதனை அனுபவித்துக் கொண்டிருப்பதை கண்கூடாகவே பல இடங்களில் காண்கிறோம்.அதே நேரத்தில், ஒழுக்கமான வாழ்வில் இருந்து வழுவாதபடி, நம்மைக் காக்க வல்லமையுள்ள இயேசுகிறிஸ்து இன்றைக்கும் ஜீவனுள்ளவராய் இருக்கிறார். தேவனுடைய பலத்த கரம், பாவக்குழியில் நம்மை விழா தபடி, தாங்கி நிலைநிறுத்த வல்லமையுள்ளதாய் உள்ளது. நம் மனம் சறுக்கும்போதெல்லாம் தேவனுடைய கிருபைகள் நம்மைத் தாங்குகிறது. வழுவாதபடிகாக்கவும்...(யூதா 1:24) என்ற பைபிள் வசனத்தைநினைவில் கொண்டு, தேவனிடம் ஜெபிப்பதன் மூலம் பாவக்குழியில் விழாதபடி நம்மைப் பாதுகாத்துக்கொள்வோம்.