பதிவு செய்த நாள்
05
ஜூலை
2011
05:07
காசி, கயா, பத்ரிநாத், திருக்கோகர்ணம், ராமேஸ்வரம் ஆகிய தலங்கள் முன்னோர் வழிபாடு செய்ய மிக ஏற்ற தலங்களாக உள்ளன.
* காசியில் 64 ஸ்நான கட்டங்கள் இருக்கின்றன. இதில் எந்தக் கட்டத்தில் வேண்டுமானாலும் தர்ப்பணம் செய்யலாம்.
* கயாவில் உள்ள ஆலமரத்தடியில் விஷ்ணு பாதம் இருக்கிறது. இங்கு தர்ப்பணம் செய்தால், முன்னோர்களில் யாரேனும் சிரார்த்தம் செய்யாமல் இறந்திருந்தாலும் கூட, அவர்களும் ஆயுள் முழுவதும் சிரார்த்தம் செய்த பலனை அடைவார்கள் என்பது நம்பிக்கை.
* இமயமலையில் உள்ள பத்ரிநாத்தில், தர்ப்பணம் செய்வது மிக மிக புண்ணியம்.
* கர்நாடக மாநிலம் திருக்கோகர்ணத்தில் கடலோரமுள்ள மகாபலேஸ்வரர் கோயில் முன்பு கடலில் நீராடி, தர்ப்பணம் செய்வதும், கோயிலிலிலுள்ள கோடி தீர்த்தத்தில் நீராடி தர்ப்பணம் கொடுப்பதும் சிறப்பு.
* தமிழகத்தில் ராமேஸ்வரம் மிக முக்கிய புண்ணியத்தலம். இங்கே தினமும் தர்ப்பணம் கொடுக்கலாம். கோயில் முன்புள்ள அக்னி தீர்த்தத்திலும், கோயிலுக்குள் இருக்கும் தீர்த்தத்திலும் நீராடி திவசம் கொடுக்கலாம்.
* இதுதவிர காவிரிக்கரையில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவையாறு ஐயாரப்பர் கோயில், திருவாரூர் மாவட்டம் செதலபதி முக்தீஸ்வரர், நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகார் சங்கமுகேஸ்வரர் கோயில், பவானி சங்கமேஸ்வரர் கோயில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில், தாமிரபரணி நதிக்கரையிலுள்ள பாபநாசம், தேனி மாவட்டம் கம்பம் அருகிலுள்ள சுருளிமலைச்சாரல் பூதநாராயணர் கோயில் ஆகிய தலங்களிலும் தர்ப்பணம் செய்யலாம்.