பதிவு செய்த நாள்
25
மே
2015
12:05
ராசிபுரம் : பட்ட பெருமாள் கோவிலில், வரும், 29ம் தேதி, கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடக்கிறது. ராசிபுரம் நகரில், பட்டபெருமாள் கோவில் திருப்பணி, மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து, வரும், 29ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.விழாவை முன்னிட்டு, வரும், 26ம் தேதி, காலை, 7 மணிக்கு கஜ பூஜை, கோ பூஜை, அஷ்வ பூஜை, மகாலட்சுமி விக்ரகம் பிரதிஷ்டை செய்தல், நவக்கிரக ஹோமம், பெரிய கடைவீதி இரட்டை விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் ஊர்வலம், வாணவேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.அன்று, மாலை, 7 மணிக்கு, புண்யாகவாஜனம், ரக்ஷாபந்தனம் நடக்கிறது. 27ம் தேதி, காலை, 7 மணிக்கு, விஷ்வக்ஷேனர் ஆராதனை, பூர்ணாகுதி, அபிஷேகம், ஆலய மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு, ஐந்தாம் ஆண்டு வருஷாபிஷேகமும் நடக்கிறது. 28ம் தேதி, மாலை, 4 மணிக்கு, வாஸ்த்துசாந்தி, அங்குரார்பணம், கும்ப அலங்காரமும் நடக்கிறது. 29ம் தேதி, அதிகாலை, 5 மணிக்கு, இரண்டாம் கால யாகவேள்வி, நாடி சந்தானம், கடம் புறப்பாடும் நடக்கிறது. அதைதொடர்ந்து, காலை, 10 மணிக்கு அபிஷேகம் கோலாகலமாக நடக்கிறது. தொடர்ந்து, அபிஷேகம், ஸ்வாமி தரிசனம் நடக்கிறது.விழாவில், பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்துள்ளனர்.