மஞ்சூர் : மாவுடைய மாலிங்கேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. மஞ்சூர் அடுத்துள்ள முள்ளிகூர் கிராமத்தில் மாவுடைய மாலிங்கேஸ்வர் கோவில் திருப்பணிகள் நடந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு புனித தீர்த்தம் கொண்டு வருதல் நிகழ்ச்சி நடந்தது. 7:00 மணிக்கு வாஸ்து சாந்தி, அங்குர்பாணம், மகாதீபாராதனை யந்திர விக்ரஹ ப்ரதிஷ்டை, அஷ்ட மருந்து சாத்துதல் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 7:15 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் காலயாக வேள்வி தொடர்ந்து, 9:15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சரணம் கோஷம் முழங்க தரிசனம் செய்தனர்.