பதிவு செய்த நாள்
25
மே
2015
12:05
கரூர்: கரூர் மாரியம்மன் வைகாசி திருவிழா முன்னிட்டு, மாவட்ட கலெக்டர் ஜெயந்தி, அமராவதி ஆற்றுப்பகுதியில் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கம்பம் ஆற்றில் விடும் இடம், வாண வேடிக்கை நடக்கும் இடம், பக்தர்கள் அதிகம் கூடும் இடம், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள், தடுப்பு வேலி அமைக்கும் பணி, மின் விளக்கு அமைக்கும் பணி, பக்தர்கள் குளிப்பதற்கான வசதி மறறும் அடிப்படை வசதிகள் குறித்து, கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மாவட்ட எஸ்.பி., ஜோசிநிர்மல் குமார், அமராவதி வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் ஜோதிமணி, நகராட்சி கமிஷனர் வரதராஜ், கோவில் அறங்காவலர் முத்துக்குமார், தாசில்தார் சிவசாமி, உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். மாவட்ட கலெக்டர் ஜெயந்தி கூறியதாவது, கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழா, மே 10ம் தேதி முதல், ஜூன் 7ம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான அமராவதி ஆற்றுக்கு கம்பம் அனுப்பும் நிகழ்ச்சி, வரும் 27ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம், கரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறை நாளான 27ம் தேதி, செலாவணி முறிச்சட்டம் அறிவிக்கப்பட வில்லை. எனவே, இந்த விடுமுறை நாளுக்கு பதிலாக, வரும் ஜூன் 20ம் தேதி (சனிக்கிழமை) அன்று அரசு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.