நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் தங்கத்தேருக்கு, மீண்டும் தங்க முலாம் பூசி புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ள, தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திருமலை கோவிலில், ஆண்டு பிரம்மோத்சவம், ரத சப்தமி போன்ற சிறப்பு வைபவங்களின் போது, தங்கத்தேர் உற்சவம் நடத்தப்படுகிறது. தங்க ரதம் தற்போது பொலிவிழந்து காணப்படுவதால், 3.5 கோடி ரூபாய் செலவில் தங்க முலாம் பூச ஆலோசிக்கப்பட்டது. வரும் செப்டம்பர் மாத இறுதியில் துவங்க உள்ள, ஆண்டு பிரம்மோற்சவ விழாவிற்குள், தங்க ரதத்திற்கு, தங்க முலாம் பூசும் பணியை முடிக்க, ஒப்பந்ததாரர்களை தேவஸ்தான அதிகாரிகள் தேர்வு செய்தனர்.