பதிவு செய்த நாள்
26
மே
2015
12:05
திருச்சி: திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில், வைகாசி விசாக தேரோட்டம் வரும், 31ம் தேதி நடக்கிறது. திருவெறும்பூர் எறும்பீஸ்வர் கோவில், வைகாசி விசாக தேரோட்டம் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு, தினசரி ஸ்வாமி புறப்பாடும், வீதியுலாவும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், வரும் 31ம் தேதி நடக்கிறது. அன்று காலை, 8 மணி முதல், 9 மணிக்குள் சுவாதி நட்சத்திரத்தில் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. ஜூன், 1ம் தேதி காலை, 9 மணி முதல், 10.30 மணி வரை தீர்த்தவாரியும், மாலையில் கொடியிறக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது. 2ம் தேதி மாலை முத்துப்பல்லக்கில் ஸ்வாமி, அம்பால் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். 3ம் தேதி மாலை, 6 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது. 4ம் தேதி விடையாற்றி உற்சவமும், மஞ்சள் நீராட்டும் நடக்கிறது.