பதிவு செய்த நாள்
26
மே
2015
12:05
கோபி: நம்பியூர் யூனியனுக்கு உட்பட்ட கோசனம் கிராமம் அருகே செல்லிபாளையம் பெரியகாடு செல்லாண்டியம்மன் அண்ணமார், மாசடச்சி, கன்னிமார், கருப்பராமயன், மகாமுனி கோவில் திருவிழா நேற்று துவங்கியது. நேற்று கொடிவேரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. இன்று(மே, 26ல்) இரவு 10 மணிக்கு வீட்டுக்கோவில் படைக்கலம் எடுத்து ஸ்வாமி அழைத்தல், இரவு, 11 மணிக்கு காட்டு கோவிலுக்கு புறப்பட்டு செல்லுதல் நடக்கிறது. வரும், 27ம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு பொங்கல் வைத்து, பொங்கல் பானை மீது ஏறி வருதல், காலை, 9.30 மணிக்கு பொழக்கடாய் பூஜை, 11 மணிக்கு கிடாய் வெட்டுதல், மதியம் மூன்று மணிக்கு பெரும் படைப்பு பூஜை, மாலை நான்கு மணிக்கு படுகளம் சாய்தல், இரவு ஏழு மணிக்கு சாம்புவன் பூஜை, இரவு எட்டு மணிக்கு மஞ்சள் நீர் ஆடுதல், இரவு, 10 மணிக்கு படைக்கலம் வீட்டு கோவிலுக்கு புறப்படுதல் நடக்கிறது. வரும், 28ம் தேதி இரவு, 12 மணிக்கு ஸ்வாமி அனுப்பி வைத்தல் நடக்கிறது. செல்லிபாளையம் விழாக்குழுவினர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்கின்றனர்.