பதிவு செய்த நாள்
26
மே
2015
12:05
திண்டிவனம்: திண்டிவனம் சர்க்கார் தோப்பு சுந்தரவரசித்தி விநாயகர் கோவிலில் முச்சந்தி விநாயகர் உற்சவம் நடந்தது. சுந்தரவரசித்தி விநாயகர் கோவிலில் வசந்த விழாவையொட்டி, கடந்த 18ம் தேதி மாலை விநாயகருக்கு மகா அபிஷேகமும், தொடர்ந்து சுவாமி வீதியுலா நடந்தது. மறுநாள் மகா அபிஷேகமும், தொடர்ந்து வேல் பூஜையும் நடந்தது. தொடர்ந்து 20ம் தேதி மகா அபிஷேகமும், விஜயகணபதி திருவீதியுலாவும், 21ம் தேதி மகா அபிஷேகமும், நிருதி கணபதி வீதியுலாவும் நடந்தது. கடந்த 22ம் தேதி பகல் 12:00 மணிக்கு பவானி அம்மனுக்கு சாகை வார்த்தல் நடந்தது. அன்று மாலை 4:00 மணிக்கு கணபதி ஹோமம், 5:00 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு விநாயக பெருமான் நர்த்தன கோலத்தில் முச்சந்தி உற்சவம் நடந்தது. உற்சவர் விநாயகர் ஊர்வலத்தில் முச்சந்திக்கு, முச்சந்தி நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டு, நேர்த்தி கடன் தேங்காய்களை உடைத்தனர். தொடர்ந்து 23ம் தேதி மாலை மகா அபிஷேகமும், சக்தி கணபதி வீதியுலாவும் நடந்தது. இரவு 7:00 மணிக்கு பவானி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று மாலை மகா அபிஷேகமும், கற்பக கணபதி வீதியுலாவும், தொடர்ந்து விடையாற்றி உற்சவமும் நடந்தது.