பதிவு செய்த நாள்
26
மே
2015
12:05
ராசிபுரம்: ராசிபுரம், கைலாசநாதர் கோவிலில், பாலதண்டாயுதபாணி பக்தர்கள் குழு சார்பில், ஜூன், 1ம் தேதி, வைகாசி விசாக, 26ம் ஆண்டு சங்காபிஷேக விழா நடக்கிறது. அன்று காலை, 9 மணிக்கு, விநாயகர் பூஜை, யஜமான பூஜை, சகல்பம் தம்பதி பூஜை, பஞ்சகவ்ய பூஜை, அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து பாலதண்டாயுதபாணி ஸ்வாமிக்கு, விசாக கலசாபிஷேகம், வள்ளி, தேவசேனா சமேத சண்முக சுப்ரமணியருக்கு, 108 சங்காபிஷேகம் நடக்கிறது. அதை தொடர்ந்து, எண்ணெய், பால், தயிர், சீயக்காய், மஞ்சள், பச்சரிசி மாவு, இளநீர், பன்னீர், சொர்ணம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகமும் நடக்கிறது. பகல், 12 மணிக்கு, உற்சவ மூர்த்திகளான வள்ளி, தேவனோ சமேதராக சண்சுப்ரமணியர் ஸ்வாமி ஆலயம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை பக்தர்கள் குழு செய்துள்ளது.