ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மேலரத வீதி சந்திப்பில் உள்ள காளியம்மன் கோயில் பொங்கல் விழா நாளை (மே 27) நடக்கிறது. நாளை காலை பால்குடம் எடுத்து ரதவீதி சுற்றி வந்து, அம்மனுக்கு பாலபிசேகம் செய்து, சிறப்பு பூஜைகள் நடக்கிறது,பின்னர் அன்னதானம், முளைப்பாரி கொண்டு செல்தல், அம்மனுக்கு பொங்கல் இடுதல் விழா நடக்கிறது. 28 இரவு 9 மணிக்கு அம்மன் வீதி உலா, 29 மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை தலைவர் அய்யனார், உப தலைவர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.