தேவதானப்பட்டி : விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன், உலக அமைதி வேண்டி வைகை அணை ராஜ்ஸ்ரீ சர்க்கரை அருகில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. குள்ளப்புரம், சங்கரமூர்த்தி, முதலக்கம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை புதூர், க.விலக்கு, பெரியகுளம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றினர். பூஜைக்கான ஏற்பாட்டை கோயில் திருப்பணிக்கமிட்டியினர் செய்திருந்தனர்.