பதிவு செய்த நாள்
27
மே
2015
11:05
கருமத்தம்பட்டி : கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 29ம் தேதி நடக்கிறது. கருமத்தம்பட்டி அடுத்த விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில் பிரசித்தி பெற்றது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், திருப்பணிகள் முடிவுற்றுள்ளன. இன்று காலை, 6:00 மணிக்கு கணபதி வழிபாட்டுடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது. மாலை 6:00 மணிக்கு முதல் கால ஓமம், பூர்ணாஹுதி, தீபாராதனை நடக்கிறது. நாளை இரண்டு மற்றும் மூன்றாம் கால ஹோமம் முடிவுற்று, மூலவர், பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்திடப்படுகிறது.வரும் 29ம்தேதி வெள்ளிக்கிழமை காலை, 9:00 மணிக்கு நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகள் முடிந்து, புனித நீர் கலசங்கள் கோவிலை வலம் வருகின்றன. காலை, 9:00 முதல், 10:20 மணிக்குள் விமானம், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. தச தரிசனத்தை தொடர்ந்து, மகா தீபாராதனை மற்றும் அன்னதானம் நடக்கிறது.