பதிவு செய்த நாள்
27
மே
2015
12:05
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உண்டியல், நேற்று திறந்து எண்ணப்பட்டது. அதில், 52 லட்சம் ரூபாய் ரொக்கமும், 130 கிராம் தங்கமும் இருந்தது. பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் வசந்த உற்சவம் நடந்து வருகிறது. இந்நிலையில், ரங்கநாதர் கோவிலில் உள்ள உண்டியல்கள், நேற்று கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் திறந்து எண்ணப்பட்டது. இதில், ரொக்கமாக, 52 லட்சத்து, 35 ஆயிரத்து, 621 ரூபாய் இருந்தது. தங்கம், 130 கிராமும், வெள்ளி, 740 கிராமும் இருந்தது. வெளிநாட்டு கரன்ஸிகள், 138 இருந்தது.