நாகர்கோவில் : கோட்டார் ஈழவர் சமுதாய வகை ஆறுமுக பெருமாள் பிள்ளையார் சுவாமி கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா 27-ம் தேதி தொடங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது. 27-ம் தேதி காலை ஐந்து மணிக்கு மகாகணபதிஹோமம், 10.30-க்கு சுத்திகிரியைகள், மாலை 6.30-க்கு வாஸ்துஹோமம், இரட்சோச்சனஹோமம், மகா பிரம்ம கலச பூஜைகள் ஆகியவை நடக்கிறது. 28-ம் தேதி காலை ஏழு மணி முதல் எட்டு மணி வரை புனர்பிரதிஷ்டைகள், காலை ஒன்பது மணிக்கு கும்பாபிஷேகம், 9.30 மணிக்கு விசேஷபூஜைகள், தொடர்ந்து அன்னதானம் ஆகியவை நடக்கிறது.