பதிவு செய்த நாள்
27
மே
2015
12:05
மதுரை: கூடலழகர் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா 24ம் தேதி தொடங்கி 7.6.2015 வரை நடைபெறுகிறது. இவ்வைகாசிப் பெருந்திருவிழாவின் முக்கிய திருநாளாக 25ம் தேதி திங்கட்கிழமை கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. அத்துடன் 28.5.2015 வியாழக்கிழமை கருடசேவையும், 2.6.2015 செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணிக்கு மேல் தேரோட்டமும், 4.6.2015 வியாழக்கிழமை தசாவதாரமும் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
நிகழ்ச்சி நிரல்:
24.5.2015 - இரவு 7.00 மணி முதல் 8.30 மணிக்குள்- விஷ்வக்சேனர் புறப்பாடு, மிருத்ஸங்கிரஹணம், அங்குரார்பணம்
முதலாம் திருநாள்
25.5.2015 - காலை: 9.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடக லக்கினத்தில் - கொடியேற்றம்
இரவு: 7.00 மணிக்கு மேல் - அன்ன வாகனம் தேரோடும் வீதி
இரண்டாம் திருநாள்
26.5.2015 - காலை: 11.00 மணிக்கு மேல்- (திருப்பல்லாக்கு) மேல ஆவணி மூல வீதி, கிருஷ்ணம்மாள் கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருளல்
இரவு: 7.00 மணிக்கு மேல் - சிம்ம வாகனம்
மூன்றாம் திருநாள்
27.5.2015 - காலை: 9.00 மணிக்கு மேல் -திருப்பல்லாக்கு தேரோடும் வீதி
இரவு: 7.00 மணிக்கு மேல்- அனுமார் வாகனம் தேரோடும் வீதி
நான்காம் திருநாள்
28.5.2015 - காலை: 11.00 மணிக்கு மேல்- (திருப்பல்லாக்கு) வடக்கு மாசி வீதி, இராமாயணச்சாவடி மண்டபத்திற்கு எழுந்தருளல்
இரவு: 8.00 மணிக்கு மேல் -(கெருடவாகனம்) வடக்கு மாசி வீதி, இராமாயணச்சாவடி மண்டபத்திலிருந்து புறப்பாடு
ஐந்தாம் திருநாள்
29.5.2015 - காலை: 11.00 மணிக்கு மேல்- (திருப்பல்லாக்கு) நேதாஜி ரோடு, அருள்மிகு மங்கள ஆஞ்சநேயர் கோயில் வியாசராயர் மண்டபத்திற்கு எழுந்தருளல்
இரவு: 7.00 மணிக்கு மேல் -சேஷ வாகனம் நேதாஜி ரோடு, அருள்மிகு மங்கள ஆஞ்சநேயர் கோயில் வியாசராயர் மண்டபத்திலிருந்து புறப்பாடு
ஆறாம் திருநாள்
30.5.2015 - காலை: 11.00 மணிக்கு மேல்- (திருப்பல்லாக்கு) பழங்காநத்தம் கோனார் மண்டபத்திற்கு எழுந்தருளல்
இரவு: 7.00 மணிக்கு மேல்- (யானை வாகனம்) பழங்காநத்தம் கோனார் மண்டபத்திலிருந்து புறப்பாடு
நள்ளிரவு: 12.00 மணிக்கு -ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல்
ஏழாம் திருநாள்
31.5.2015 - காலை: 11.00 மணிக்கு மேல் -தங்கச் சிவிகையில் ஸ்ரீபெருமாள் உபய நாச்சியாருடன் பாண்டிய வேளாளர் மஹா ஜன சமூக மண்டபத்திற்கு எழுந்தருளல்
இரவு: 8.00 மணிக்கு மேல்- பூச்சப்பரம், சூர்ணோற்சவம்
எட்டாம் திருநாள்
1.6.2015 - காலை: 9.00 மணிக்கு மேல் -திருப்பல்லாக்கு தேரோடும் வீதி
இரவு: 8.00 மணிக்கு மேல் -குதிரை வாகனம் திருத்தேர் கடாட்சித்தல்
ஒன்பதாம் திருநாள்
2.6.2015 - காலை: 5.00 மணிக்கு மேல்- ஸ்ரீபெருமாள் உபய நாச்சியாருடன் ரதாரோகணம்
காலை: 6.00 மணிக்கு மேல்- திருத்தேர் வடம்பிடித்தல்
மாலை: 4.30 மணிக்கு மேல் - கூடலழகர் பெருமாள் சன்னதித் தெரு த.சோணைக் கொத்தனார் வகையறா மண்டபத்தில் அலங்கார திருமஞ்சனம்
இரவு: 8.30 மணிக்கு மேல்- தங்கச் சிவிகையில் திருக்கோயிலுக்கு எழுந்தருளல் இரவு துவஜா அவரோகணம் (கொடியிறக்கம்)
பத்தாம் திருநாள்
3.6.2015 - காலை: 9.00 மணிக்கு மேல்- திருப்பல்லாக்கு ஸ்ரீவேதாந்த தேசிகர் சன்னதிக்கு எழுந்தருளல்
மாலை: 4.00 மணிக்கு மேல்- அலங்கார திருமஞ்சனம்
இரவு: 7.00 மணிக்கு மேல்- எடுப்புச்சப்பரம், சப்தாவரணம், உபய நாச்சியாருடன் திருத்தேர் தடம் பார்த்தல்
பதினோராம் திருநாள்
4.6.2015 - காலை: 8.00 மணிக்கு மேல்- (குதிரை வாகனம்) மேலமாசிவீதி, வக்கீல் புதுத்தெரு வழியாக வையாற்றில் இறங்கி திருக்கண்களில் எழுந்தருளி ராமராயர் மண்டபத்திற்கு எழுந்தருளல் மாலை: 5.00 மணிக்கு மேல்- தீர்த்தவாரி
இரவு: 9.00 மணிக்கு மேல்- தசாவதாரம்
பன்னிரண்டாம் திருநாள்
5.6.2015- காலை: 8.00 மணிக்கு மேல்- (கெருட வாகனம்) பனகல் ரோடு, மேம்பாலம், யானைக்கல், கீழ மாசி வீதி, அம்மன் சன்னதித் தெரு, கீழாவணி, தெற்காவணி மூலவீதி வழியாக கன்னிகா பரமேஸ்வரி அம்மன் சத்திரத்தில் எழுந்தருளல்
மாலை: 4.00 மணிக்கு மேல்- அலங்கார திருமஞ்சனம்
இரவு: 7.00 மணிக்கு மேல்- குதிரை வாகனம் திருக்கோயிலுக்குள் எழுந்தருளல்
பதிமூன்றாம் திருநாள்
6.6.2015 - காலை: 7.30 மணிக்கு மேல் - விடையாற்றி உற்சவம்
பதினான்காம் திருநாள்
7.6.2015 - காலை: 8.00 மணிக்கு மேல்- உற்சவ சாந்தி, அலங்காரத் திருமஞ்சனம், ஸ்ரீபெருமாள் உபய நாச்சியாருடன் ஆஸ்தானம் எழுந்தருளல்.
தி. அனிதா, பி.ஏ., பி.எல்., (உதவி ஆணையர்/ செயல் அலுவலர்)
தா. வரதராஜன் எம்.ஏ., பி.எல்., (தக்கார்)