பதிவு செய்த நாள்
28
மே
2015
11:05
திருச்சி: ஸ்ரீரங்கம் ஹிந்து சமய மன்றம் சார்பில், 38ம் ஆண்டு சமஷ்டி உபநயனம் வரும், 30ம் தேதி மாலை, 4 மணிக்கு உதகசாந்தி நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. மாலை, 6 மணிக்கு குத்துவிளக்கு பூஜை நடக்கிறது. 31ம் தேதி காலை, 4.30 மணி முதல், 6 மணி வரை கணபதி ஹோமம் மற்றும் பூர்ணாஹூதியும், 8 மணிக்கு மகா சுதர்ஸன ஹோமமும் நடக்கிறது. காலை, 8 மணிக்கு, 25 பேருக்கு ப்ரம்மோபதேச முகூர்த்தம் நடக்கிறது. 30ம் தேதி நடக்கும் குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஜூன், 1ம் தேதி நாமசங்கீர்த்தனம், 2 மற்றும் 3ம் தேதிகளில் ‘ராமாயணம் குடி கொண்ட கோவில் ராமனுஜர்’ என்ற தலைப்பில் உபன்யாஸம் நடக்கிறது. 4 மற்றும் 5ம் தேதி வாமன அவதாரம், சீதா கல்யாணம் உபன்யாஸம் நடக்கிறது. 6ம் தேதி அஷ்டபதி பஜனை, திவ்ய நாம பஜனை நடக்கிறது. ஜூன், 7ம் தேதி காலை, 8 மணிக்கு உஞ்சவிருத்தி பஜனையுடன் துவங்கி, காலை, 10.30 மணிக்கு சீதா கல்யாணம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய மன்றத்தினர் செய்கின்றனர்.