பதிவு செய்த நாள்
28
மே
2015
11:05
துறையூர்: துறையூர் பெருமாள்மலையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரஸன்ன வெங்கடாஜலபதி கோவிலில், வைகாசி தேர்திருவிழா கொடியேற்றம் நடந்தது. திருவிழாவிற்காக கடந்த, 22ம் தேதி, நகர் சோதனை செய்து, வாஸ்துசாந்தி செய்யப்பட்டது. கடந்த, 24ம் தேதி கொடியேற்றம் நடந்தது. மாலையில், ஆறுநாட்டு வேளாளர் சமூகம் சார்பில், அன்னவாகனத்தில் ஸ்வாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து, ஒவ்வொரு நாள் காலையில் பல்லக்கிலும், இரவில் பல்வேறு வாகனத்திலும் ஸ்வாமி திருவீதியுலா நடைபெறும். வரும், 30ம் தேதி, செங்குந்தர் மரபினர்கள் சார்பில், ஸ்வாமி திருக்கல்யாணம் நடைபெறும். இரவு இந்திர விமானத்திலும், 8ம் நாள் இரவு குதிரை வாகனத்திலும், திருவீதியுலா நடைபெறும். வரும் ஜூன், 1ம் தேதி காலை, 9 மணிக்கு தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். 10ம் நாள் காலை தீர்த்தவாரி, இரவு சப்தாவரணம், 11ம் நாள் காலை திருமஞ்சனம், இரவு ஆளும் பல்லக்கில் ஸ்வாமி வீதியுலா நடைபெறும்.