பதிவு செய்த நாள்
30
மே
2015
01:05
காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த, வள்ளுவர் நகரில் நடந்த மஹா சக்தி மாரியம்மன், செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில், திரளான பக்கதர்கள் கலந்து கொண்டனர்.
விழாவை முன்னிட்டு, கடந்த 27ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கொடியேற்றம், கணபதி பூஜை, வாஸ்து ஹோமம், யாக சாலை பூஜை, கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம், இரண்டாம் கால யாக பூஜை, கணபதி ஹோமம், புற்று மண் எடுத்தல், கோபுர கலசம் புறப்பாடு, கலச ஸ்தாபனம், யாக சால பூஜை, நவக்கிரஹ ஹோமம், ஸ்வாமி சிலைகளுக்கு, மூலிகை திரவிய அபிஷேகம், அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நடந்தது.
நேற்று, காலை, 6.30 மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜை, சண்டி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், யாத்திரா தானம், காலை, 9.15 மணிக்கு மேல், 10.15 மணிக்குள், கணபதி, மஹா சக்தி மாரியம்மன் கோவில், கும்பாபிஷேகம் நடந்தது. காரிமங்கலம் அருணேஸ்வரர் கோவில் குருக்கள் புருஷோத்தமன் தலைமையில், சிவாச்சாரியார்கள், கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். எம்.எல்.ஏ., அன்பழகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இரவு, 7 மணிக்கு, திருவிளக்கு பூஜை நடந்தது.