தர்மபுரி: தர்மபுரி, டேனிஸ்பேட்டை சையத்சங்கால்ஷா காதர்வலித அவுலியா சந்தனகூடு மற்றும் உரூஸ் திருவிழா, ஜூன் 3ம் தேதி நடக்கிறது. இதையொட்டி அன்று மாலை 6 மணிக்கு சந்தனகுடம் அலங்கரிக்கப்பட்ட சாரட் வண்டியில் ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக எடுத்து செல்லப்பட்டு தர்காவை சென்றடைகிறது. இரவு 10 மணிக்கு பெங்களூரு கவாலி குழுவினரின் இஸ்லாமிய பாடல் நிகழ்ச்சி நடக்கிறது. 4ந் தேதி இரவு 8 மணிக்கு பாத்திய துவா, சிறப்பு விருந்தும், இரவு 9 மணிக்கு கலைநிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.