பதிவு செய்த நாள்
01
ஜூன்
2015
12:06
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை பகுதியிலுள்ள சிவன் கோவில்களில், பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. எலவனாசூர்கோட்டை, ஸ்ரீகிராம அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், வைகாசி மாத பிரதோஷத்தையொட்டி, சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு நடந்தது. நேற்று மாலை 4:30 மணிக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி காட்சியளித்தார். அதே போல் உளுந்தூர்பேட்டை ஸ்ரீகைலாசநாதர் சுவாமி கோவில், ஆதனூர் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் சுவாமி கோவில், திருநாவலூர் ஸ்ரீமனோன்மணி உடனுறை பக்த ஜனேஸ்வரர் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடுகள் நடந்தது. பிரதோஷத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர்.