தேவசேனாபதியாகிய முருகன் லட்சத்து ஒன்பது வீரர்களுடன் கைலாயத்தில் இருந்து தெற்கு நோக்கி சூரசம்ஹாரத்திற்காகப் புறப்பட்டார். வரும் வழியில் விந்தியமலைப் பகுதியில் இருந்த மாயாபுரியை ஆண்ட தாராகாசுரன் முருகனைத் தடுத்தான். மாயையில் வல்ல கிரவுஞ்ச மலையும் அவனுக்கு துணை நின்றது. முருகன் வேலை வீசி, அந்த மலையை இரண்டாகப் பிளந்ததோடு, அசுரனையும் வதம் செய்தார். அசுரனை யானையாக மாற்றி, தன் தம்பியான ஐயப்பனுக்கு பரிசளித்தார். அதுமுதல் யானை ஐயப்பனின் வாகனமானது. காளிதாசர், தனது குமாரசம்பவம் என்ற நுõலில், இவ்வாறு சொல்லியுள்ளார்.