சோமவாரம் என்னும் திங்கள்கிழமை சிவனுக்குரியது. சுக்கிர வாரம் என்னும் வெள்ளி அம்பிகைக்கு உரியது. இந்த இரண்டும் முருகனுக்குரிய விரத நாட்களாக உள்ளன. இதில் சுக்கிரவார விரதம் சிறந்ததாக கருதப்படுகிறது. இதன் பெருமையை வசிஷ்டர் முசுகுந்த சக்கரவர்த்திக்கு கூறியதாக கந்தபுராணம் கூறுகிறது. அசுர குருவான சுக்கிராச்சாரியாரின் வேண்டுகோள் படி, பகீரதன் இந்த விரதம் மூலம் பகைவரை வெல்லும் சக்தி பெற்றான். சோமவார விரதத்தால் மனபலம் கூடும். சுக்கிர வார விரதத்தால் நினைத்தது நடத்தும் திறமை கூடும்.