முருகனுக்கு குறிஞ்சிக் கிழவன் என்ற பெயருண்டு. மலைக்கு உரியவன் என்பது இதன் பொருள். திருமுருகாற்றுப்படையில் நக்கீரர், சோலைமலை கிழவோனே என்று பாடினார். இதைக் கேட்ட முருகன் விளையாட்டாக அவரிடம், பூதத்திடம் இருந்து காப்பாற்றிய என்னைக் கிழவன் என்கிறாயே, என்று கேட்டார். இதையடுத்து நக்கீரர், முருகனைப் பற்றிய பாடலில், என்றும் இளையாய் அதாவது எப்போதும் இளைஞனே என்று குறிப்பிட்டு பாடினார்.