விழுப்புரம்: திருவெண்ணைநல்லூர் அடுத்த பெண்ணைவளம் கூத்தாண்டவர் கோவிலில் பிராயச்சித்தா ஹோமம் மற்றும் உற்சவ விழா நடக்கிறது. விழாவையொட்டி, கடந்த 15ம் தேதி மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், 20ம் தேதி துவஜாரோகனம் ரக்ஷாபந்தனம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, 26ம் தேதி கூத்தாண்டவர் சுவாமிக்கு உற்சவம் துவங்கப்பட்டது. பின்னர், இன்று 2ம் தேதி இரவு கூத்தாண்டவர் சுவாமி கண் திறப்பு, முத்துப்பல்லக்கு வீதியுலா நிகழ்ச்சியும், நாளை 3ம் தேதி கூத்தாண்டவர் தேரோட்டமும், 4ம் தேதி தருமர் பட்டா பிஷேகம், மஞ்சள் நீர் உற்சவமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் சீட்டுக்காரர்கள் செய்து வருகின்றனர்.