அல்லாஹ்வால் விதிக்கப்பட்ட விதி பற்றி எதையாவது உண்டு என்றோ, இல்லை என்றோ, சரியாகவோ, தவறாகவோ, குறைவாகவோ, அதிகமாகவோ சொல்வாரேயானால் அதுபற்றி அவ்வாறு சொன்னவர் மறுமை நாளில் (இறப்பிற்கு பிறகு) விசாரிக்கப்படுவார். அதைப்பற்றி பேசாதவர் விசாரிக்கப்பட மாட்டார் என நபிகள் நாயகம் கூறியதாக அவரது துணைவியார் ஆயிஷா (ரலி) அம்மையார் கூறுகிறார். ஒருமுறை நபிகள் நாயகம், தனது துணைவியார் ஆயிஷா (ரலி) அம்மையாரிடம், நமது மார்க்கம் தொடர்பாக உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் நோக்கத்துடன் உங்களில் ஒருவரிடம் ஷைத்தான் வருவான்.உங்களிடம் வானங்களை யார் படைத்தது? பூமியை யார் படைத்தது? என கேட்பான். இவ்வாறு பல கேள்விகளைக் கேட்டு கடைசியில் உனது இறைவனைப் படைத்தது யார்? என கேட்பான். இந்த நிலையில், நீங்கள் இறைவனிடம் பாதுகாப்பு கேளுங்கள். இறைவனை நினைத்து அவனது திருநாமம் கூறி பாதுகாப்பு கேட்டால் மிகவும் இழிந்தவனாக ஓடிவிடுவான். யார் மார்க்கத்திற்கு விரோதமான வார்த்தைகளால் மக்களை திசை திருப்புகிறார்களோ அவர்களது நபிலான (முறையான) வணக்கங்களையும், பர்லான வணக்கங்களையும் இறைவன் ஏற்றுக்கொள்வதில்லை, என்றார்.இறைவனைப் பற்றி யார் சந்தேகம் கிளப்பினாலும், அதை காதிலேயே வாங்கக்கூடாது... புரிகிறதா!