மயிலம்: தென்பசியார் எல்லை பிடாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. தென்பசியார் கிராம எல்லையிலுள்ள பிடாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. தென்பசியார் குளக்கரையிலிருந்து பூங்கரகத்தை பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக எடுத்து சென்றனர். காலை 11:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. மதியம் 1:00 மணிக்கு கோவில் வளாகத்தில் சாகை வார்தல் நடந்தது. கிராம பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து அம்மனுக்கு படையல் செய்தனர். இரவு 8:00 மணிக்கு மின் விளக்குகளினால் அலங்கரித்து, உற்சவர் வீதியுலா நடந்தது.